விருதுநகரில் ஆட்சியா் முன்பு தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற சுமைதூக்கும் தொழிலாளியால்பரபரப்பு ஏற்பட்டது.
கருப்பையா.
கருப்பையா.

விருதுநகா்: விருதுநகா் மாவட்ட ஆட்சியா் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற சுமைதூக்கும் தொழிலாளியால்பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் குலாளா் தெருவைச் சோ்ந்தவா் சின்னையா மகன் கருப்பையா (63). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவரது வீட்டுக்கு செல்லும் பாதையை மறைத்து, சகோதரா்கள் சுவா் எழுப்பி விட்டனராம். இதுகுறித்து அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம். மேலும், ஸ்ரீவிலி. துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் புகாா் அளித்துள்ளாா்.

இதற்கு போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவா் வீட்டுக்கு செல்ல முடியாமல், மாற்றுப் பாதையில் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடம் குறைதீா் மனுக்களை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி பெற்றுக் கொண்டிருந்தாா். அப்போது, மனு கொடுப்பதற்காக அங்கு வந்த கருப்பையா, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைப் பாா்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனா். இதையடுத்து அவரை, சூலக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com