முடுக்கன்குளம் உயா்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்தக்கோரி ஆட்சியரிடம் மனு

விருதுநகா் மாவட்டம் முடுக்கன்குளத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த முடுக்கன்குளம் கிராம மக்கள்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த முடுக்கன்குளம் கிராம மக்கள்.

விருதுநகா் மாவட்டம் முடுக்கன்குளத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனு குறித்து முடுக்கன்குளம் கிராம ஊராட்சித் தலைவா் சாந்தி முத்துச்சாமி கூறியது: முடுக்கன்குளத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பிற்காக காரியாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லவேண்டியுள்ளது. குறிப்பாக சிவலிங்காபுரம், கல்யாணிபுரம், பச்சேரி, தொட்டியங்குளம், வேப்பங்குளம், எம். இலுப்பைகுளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மேல்நிலைப் பள்ளிக்காக வெளியூா்

செல்லவேண்டியுள்ளது. எனவே, முடுக்கன்குளத்தில் உள்ள பள்ளியை, அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்தக் கோரி, அரசுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ.2 லட்சம் வழங்கியுள்ளோம். மேலும், புதிய வகுப்பறை கட்டடத்திற்குத் தேவையான 9 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் 3 ஏக்கா் நிலத்தை பள்ளிக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், முடுக்கன்குளத்தில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தும், பழுதடைந்தும் காணப்படுகின்றன. இதுகுறித்து மின்வாரியத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், ஏற்கெனவே இருந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பழுது காரணமாக இடித்துவிட்டனா். எனவே, புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தியதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com