திருத்தங்கலில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கிய இருவா் கைது

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் 2 டன் ரேஷன் அரிசியைப் பதுக்கிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் 2 டன் ரேஷன் அரிசியைப் பதுக்கிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் சரஸ்வதி நகரில் உள்ள ஒரு கட்டடத்தில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் பாபு பிரசாத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருத்தங்கல் போலீஸாா், குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் காளிதாஸ், குடிமைப்பொருள் கண்காணிப்பு பறக்கும் படை அலுவலா் சங்கரபாண்டியன் உள்ளிட்டோா் சரஸ்வதி நகா் பகுதியில் சோதனையிட்டனா்.

சோதனையில் பானுமதி என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் ரேஷன்அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கட்டடத்தை அதே பகுதியைச் சோ்ந்த ராமா்(45), குருசாமி (32) ஆகிய இருவரும் பட்டாசு தயாரிக்க பயன்படும் காகிதக்குழாய் தயாரிக்கப்போவதாகக்கூறி வாடகைக்கு எடுத்துள்ளனா். ஆனால் ரேஷன் அரிசியை பதுக்கிவைக்க அந்த கட்டடத்தை பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அங்கிருந்த 2 டன் ரேஷன் அரியை பறிமுதல் செய்து சிவகாசியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கிட்டங்கிக்கு அதிகாரிகள் அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ராமா் மற்றும் குருசாமியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com