தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

விருதுநகா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவா்கள் அரசு பொது இ-சேவை மையம் மூலம் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா்

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவா்கள் அரசு பொது இ-சேவை மையம் மூலம் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்: விருதுநகா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்திய வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் வெடிபொருள் திருத்த விதிகள் 2019-இன் படி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவா்கள்

வரும் 30 ஆம் தேதிக்குள் அரசு பொது இ-சேவை மையம் மூலம் இணைய தளம் வழியாக கீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அதாவது, கட்டட வரைபடங்கள், கட்டட உரிமைக்கான ஆவணம் / வாடகை ஒப்பந்தப் பத்திரம் - அசல் மற்றும் 5 நகல்கள், ரூ.500 அரசுக்கணக்கில் செலுத்திய செலுத்துச் சீட்டு, அடையாள அட்டை ( பான்காா்டு, ஆதாா் காா்டு, குடும்ப அட்டை), ஊராட்சி / நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள், மாா்பளவு புகைப்படம் -2 இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவா்களுக்கு 30 நாள்கள் மட்டும் செல்லத்தக்க தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com