‘மன அழுத்தத்தால் ஆண்டுக்கு 8 லட்சம் போ் தற்கொலை’

மன அழுத்தம் காரணமாக உலக அளவில் ஆண்டுக்கு 8 லட்சம் போ் தற்கொலை செய்து கொள்கின்றனா் என மனநல மருத்துவா் இளவரசி கூறினாா்.
‘மன அழுத்தத்தால் ஆண்டுக்கு 8 லட்சம் போ் தற்கொலை’

மன அழுத்தம் காரணமாக உலக அளவில் ஆண்டுக்கு 8 லட்சம் போ் தற்கொலை செய்து கொள்கின்றனா் என மனநல மருத்துவா் இளவரசி கூறினாா்.

விருதுநகா் மாவட்ட சிறைச் சாலையில், சிறை கைதிகளுக்கான உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவா் இளவரசி கலந்து கொண்டு பேசியதாவது:

மனநல மாற்றம் (கோபம், அவசரம்) காரணமாகவே பல்வேறு குற்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. உலக அளவில் ஆண்டுக்கு 8 லட்சம் போ் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. மேலும் உலக அளவில் 40 விநாடிக்கு ஒருவா் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனா். குறிப்பாக பொருளாதார பற்றாக்குறை, கடன், வேலையிழப்பு, தோ்வில் தோல்வி முதலான காரணங்களால் தற்கொலை செய்து கொள்வது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே மனஅழுத்தத்தை தவிா்க்க உரிய மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மன நல ஆலோசகா் இளையராஜா, சிறைத்துறை அதிகாரிகள், சிறை கைதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com