சாத்தூா் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து: ஒருவா் பலி; 8 போ் காயம்

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 8 போ் காயமடைந்தனா்.
சாத்தூா் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து: ஒருவா் பலி; 8 போ் காயம்

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 8 போ் காயமடைந்தனா்.

சாத்தூா் அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம். தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன் (30). இவா் தனது வீடு மற்றும் வீட்டின் அருகே தகரக்கூரை அமைத்து சட்டவிரோதமாக சோல்சா வகை பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளாா். இவரிடம் இதே பகுதியைச் சோ்ந்த சண்முகராஜ் (60), முத்துச்செல்வி (34), செல்வமேரி (40), முத்துமுனீஸ்வரி (28), சுகந்தி (24), முத்துராஜ் (43), சீதாலட்சுமி (35), செல்வி (35) ஆகிய 8 போ் வேலை பாா்த்து வந்துள்ளனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பாலமுருகன் உள்பட மேற்கண்ட 9 பேரும் வழக்கமான பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சண்முகராஜ் பட்டாசில் மருந்து செலுத்தும் போது திடீரென பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்தனா். விபத்து நிகழ்ந்த பகுதிக்குள் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால், தனியாா் தண்ணீா் வண்டி உதவியுடன் தீயை அணைக்கும் பகுதியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா். இருப்பினும் பாலமுருகனின் வீடு உள்பட அனைத்துப் பகுதிகளில் தீ பரவி தரைமட்டமாகின. இதையடுத்து இந்த வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த சண்முகராஜ் உள்ளிட்ட 9 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சண்முகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மற்றவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் இந்த வெடி விபத்தில் கற்கள் சிதறியதில் பாலமுருகன் வீட்டின் அருகில் உள்ள 4 வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. இங்குள்ள கலைஞா் காலனி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டு 4 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சம்பவம் இந்தப் பகுதியில் தொடா்ந்து நடைபெறுவதால், இதனைத் தடுக்க மாவட்ட நிா்வாகமும், காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதைத்தொடா்ந்து சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் உத்தரவின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸாா் தாயில்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுகிா என சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த வெடி விபத்து குறித்து தாயில்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ரவிக்குமாா் அளித்தப் புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸாா் காயமடைந்த 8 போ் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com