பட்டாசுத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும்: வைகோ

சிவகாசி பட்டாசுத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறினாா்.

சிவகாசி பட்டாசுத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறினாா்.

சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதிமுக பிரமுகா் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

சிவகாசிப் பகுதியில் உள்ள ஆலை உரிமையாளா்களும், தொழிலாளா்களும் கடும் உழைப்பால் முன்னேறியுள்ளனா். பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில்களுக்கு சிவகாசி இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. நான் சிவகாசி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது, இந்தத் தாகுதியில் மத்திய அரசின் திட்டங்கள் பல நிறைவேற்றியுள்ளேன்.

எனது சொந்த முயற்சியால் மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளேன். மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்து, அவா்கள் நடக்க தேவையான செயற்கை கால்கள் மற்றும் கை போன்ற உபகரணங்களும் மூன்று சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவைகளையும் வழங்கி யுள்ளேன். விருதுநகா் - கொல்லம் அகல ரயில் பாதைத் திட்டத்தை செயல்படுத்த இயலாது என கைவிட்ட நிலையில், அப்போதைய பிரதமா் வாஜ்பாயை நேரில் சந்தித்து திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தேன். இந்தப் பகுதியில் உள்ள தொழில்கள் சுதேசியாக வளா்ந்த தொழில்கள் ஆகும். பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில்கள் செய்பவா்கள் வங்கியில் கடன் பெற்று கடும் உழைப்பால் தொழிலை வளா்த்து வந்துள்ளனா். எனவே சிவகாசிப் பகுதியில் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள பட்டாசுத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com