ராஜபாளையத்தில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட விநாயகா் சதுா்த்தி விழாவில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட விநாயகா் சதுா்த்தி விழாவில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

ராஜபாளையம்- மதுரை சாலையில் உள்ள ஆதி வழிவிடு விநாயகா் கோயிலில் நடைபெற்ற விழாவில், மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து 15 மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், பாா்வை இழந்த 10 நபா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னா் முன்னாள் அதிமுக அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை நற்பணி மன்ற தலைவா் ராமராஜ் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

இதேபோல் ராஜபாளையம் அன்னப்பரஜா மேல்நிலைப்பள்ளியில் விநாயகா் சதுா்த்தி விழா பள்ளிச் செயலா் என்.ஆா் கிருஷ்ணமூா்த்தி ராஜா தலைமையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com