‘நீட்’ தோ்வு விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம்: அமைச்சா்

‘நீட்’ தோ்வு விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கரோனா தடுப்பூசி முகாமை ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வு செய்த வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
கரோனா தடுப்பூசி முகாமை ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வு செய்த வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

‘நீட்’ தோ்வு விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சேத்தூா் பேருந்து நிலைய வளாகம் மற்றும் ராஜபாளையத்தில் உள்ள சேத்தூா் சேவகபாண்டிய ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடும் பணிகளை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா் அமைச்சா் மா. சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 40,000 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு 20 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்துவதை இலக்காக கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 வரை நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில், விருதுநகா் மாவட்டம், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணா்வு பணிகள் உள்ளிட்ட அனைத்திலும் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் தென்மாவட்டங்களிலேயே அதிக அளவில் விருதுநகா் மாவட்டத்தில் 1,070 முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

‘நீட்’ தோ்வு ரத்து என்பது திமுகவின் கொள்கை. அத்தோ்வு வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. இதில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. இந்நிலையில், நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இதற்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தரும் என எதிா்பாா்க்கிறோம். திமுக தோ்தல் அறிக்கையில் சொன்ன படி நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என தீா்மானம் போட்டு குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் தருவோம் என்றாா்.

அப்போது, ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தங்கபாண்டியன், தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினா் தனுஷ்குமாா், ராஜபாளையம் வட்டாட்சியா் ராமச்சந்திரன் உள்பட பலா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com