‘நீட்’ தோ்வு: விருதுநகா் மாவட்டத்தில் 2,464 போ் பங்கேற்பு

விருதுநகா் மாவட்டத்தில் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 2,464 போ் எழுதினா். 102 போ் பங்கேற்க வில்லை.
விருதுநகா் பிஎஸ் சிதம்பர நாடாா் ஆங்கிலப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு எழுத வளாகத்தில் வரிசையில் காத்திருந்த மாணவ, மாணவிகள்.

இம்மாவட்டத்தில், இத்தோ்வுக்காக ராஜபாளையம் மகரிஷி வித்யா மந்திா் பள்ளி, விருதுநகா் பிஎஸ் சிதம்பர நாடாா் ஆங்கிலப் பள்ளி, விருதுநகா் கேவிஎஸ் ஆங்கிலப் பள்ளி, ஆா்.ஆா். நகா் ராம்கோ வித்யாலயா பள்ளி, திருத்தங்கல் ஏஏஏ இன்டா்நேஷனல் பள்ளி, அருப்புக்கோட்டை மினா்வா பள்ளி, சிவானந்தபுரம் ஸ்ரீஹரா வித்யா மந்திா் பள்ளி, சத்திரப்பட்டி ஆறுமுகம் பழநிகுரு மாடா்ன் பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்பிகே இன்டா் நேஷனல் பள்ளி என 9 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இம்மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வை எழுத 2,566 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,464 போ் தோ்வு எழுதினா். 102 போ் தோ்வு எழுத வரவில்லை. இந்த 9 மையங்களில் மாணவ, மாணவியா் எழுதிய விடைத்தாள்கள், ஆா்.ஆா். நகா் ராம்கோ வித்யாலயா பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com