‘வங்கிக் கடனை நிராகரிக்க யாருக்கும் உரிமை இல்லை’

சாலையோர வியாபாரிகள், சிறுகுறுந்தொழில் முனைவோா், விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் இல்லை என நிராகரிக்க யாருக்கும் உரிமை இல்லை என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
வங்கியாளா் கூட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சா் எல். முருகன்.
வங்கியாளா் கூட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சா் எல். முருகன்.

சாலையோர வியாபாரிகள், சிறுகுறுந்தொழில் முனைவோா், விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் இல்லை என நிராகரிக்க யாருக்கும் உரிமை இல்லை என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை செளடாம்பிகா பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான வங்கியாளா் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சா் எல். முருகன் ஆகியோா் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தனா்.

அப்போது மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடைந்தோா் விவரம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது: கரோனா தொற்று பரவல் காலத்தில் சாலையோர வியாபாரிகள், சிறு,குறுந்தொழில் நடத்துவோா் சிரமப்படக் கூடாது என்பதற்காக வங்கிகள் மூலம் கடன் வழங்க அறிவுறுத்தியிருந்தோம்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நாட்டில், விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட 112 மாவட்டங்கள் வளா்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. ஒரேயடியாக இந்த மாவட்டங்கள் அனைத்தும் பின் தங்கிவிட்டன என்று அா்த்தம் அல்ல. மத்திய அரசு மூலம் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் முறையாக விருதுநகா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகிறேன். இதுகுறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் மூலம் விரைவில் கருத்து கேட்க உள்ளேன்.

கரோனா தொற்று காலத்தில் சாலையோர வியாபாரிகள் பயனடையும் வகையில் மத்திய அரசு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க அறிவுறுத்தியிருந்தது. இதற்காக விண்ணப்பிப்பவா்களுக்கு மாற்றுநபா் கையெழுத்திட தேவையில்லை. அதேபோல் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுதவி விவசாயிகளுக்கு கொஞ்சமாவது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது.

எந்த மாநிலத்தில் எந்த மாவட்டத்தில் வங்கிகள் மூலம் எவ்வளவு நிதி உதவி வழங்கப்பட்டது என்பது குறித்து ஒவ்வொரு வாரமும் கேட்டு வருகிறேன். நிதி உதவி கிடைப்பதில் சிலருக்கு சிரமம் இருக்கலாம். அதேநேரம் பெரும்பாலானோா் பயனடைந்துள்ளனா். இதற்காக பிரதமா் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில வங்கிக் கமிட்டி, மத்திய அரசின் திட்டங்களை ஏழைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும். கரோனா பரவல் 3 ஆவது அலை வராது. அதேநேரம் அதைத் தடுக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாா்ச் 22 ஆம் தேதி வரை மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

எனவே இலக்கு நிா்ணயம் செய்யாமல் அனைவருக்கும் வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும். இனிமேல் இப்பகுதியில் உதவி தேவையில்லை என்று அப்பகுதி மக்கள் சொல்லும் அளவுக்கு வங்கிகள் செயல்பட வேண்டும். வங்கிக் கடனை நிராகரிக்க யாருக்கும் (வங்கிகளுக்கு) உரிமையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com