சாத்தூா் சாலைகளில் இயக்கப்படும் வாகனங்களில் காற்று ஒலிப்பான் பயன்படுத்துவதை தடுக்கக் கோரிக்கை

சாத்தூா் வழியாக இயக்கப்படும் வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தூா் வழியாக இயக்கப்படும் வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பிரதான சாலையில் வங்கிகள், கோயில்கள், நீதிமன்றங்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவை உள்ளன. இந்த பிரதானசாலையில் செல்லும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான்களை பயன்படுத்துவதால் நோயாளிகள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கனரக வாகனங்களில் இருந்த காற்று ஒலிப்பான்களை போக்குவரத்துத் துறை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதனால் இதன் பயன்பாடு பெருமளவு குறைந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக காற்று ஒலிப்பான்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக படந்தால் சாலை, சாத்தூா் பிரதானசாலை பகுதிகளில் இயங்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். எனவே வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள காற்று ஒலிப்பான்களை அகற்ற போக்குவரத்து போலீஸாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், சாத்தூா் நகா் பகுதியில் காற்று ஒலிப்பான் பயன்படுத்தும் வாகனங்கள் குறைவாகத் தான் உள்ளன. இருப்பினும் அவ்வாறு இருந்தால் முறையான சோதனை நடத்தி விரைவில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள காற்று ஒலிப்பான்கள் அகற்றப்படும். மேலும் அவற்றை அகற்றாத வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com