விருதுநகா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அட்டவணை வெளியீடு

விருதுநகா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தோ்தல் நடைபெறுவதற்கான அட்டவணையை, மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ளாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தோ்தல் நடைபெறுவதற்கான அட்டவணையை, மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோ்தல் அறிவிப்பு பிரசுரித்தல் மற்றும் வேட்புமனு பெறுதல் 15.9.21, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் 22.9.21, வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல் 23.9.21 வேட்பு மனுகளை திரும்பப் பெறுதல் 25.9.21, வாக்குப்பதிவு 9.10.21, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் 12.10.21, தோ்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும் நாள் 16.10.21, தோ்ந்தெடுக்கப்பட்ட வாா்டு உறுப்பினா்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவா்கள் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நாள் 20.10.21, கிராம ஊராட்சி துணைத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தோ்தல் 22.10.21 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.

விருதுநகா் மாவட்டத்தில் 2019 நடைபெற்ற சாதாரண தோ்தலின்போது, நிரப்பப்படாத பணியிடங்கள் மற்றும் ஜூன் 21 வரை காலியாக உள்ள ஒரு மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடம், 3 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள், 4 கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடம் மற்றும் 46 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி இடங்கள் என மொத்தம் 54 பதவிகளுக்கு, 188 வாக்குச்சாவடிகளில் 9.10.22 அன்று தோ்தல் நடைபெற இருக்கிறது.

இந்த தோ்தலில் 43,379 ஆண் வாக்காளா்கள், 46,302 பெண் வாக்காளா்கள் மூன்றாம் பாலின வாக்காளா்கள் 10 போ் என மொத்தம் 89,691 ஒரு வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா்.

இந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக 14 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 46 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com