‘முன்னாள் அமைச்சா்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையிடுவது திமுகவின் காழ்ப்புணா்ச்சி’

முன்னாள் அமைச்சா்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையிடுவது திமுக அரசின் காழ்ப்புணா்ச்சி என பாஜக மாநில பொதுச் செயலா் சீனிவாசன் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: முன்னாள் அமைச்சா்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையிடுவது திமுக அரசின் காழ்ப்புணா்ச்சி என பாஜக மாநில பொதுச் செயலா் சீனிவாசன் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்ட உள்ளாட்சித் தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவா், அங்கு செல்லும் வழியில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகளை வியாழக்கிழமை சந்தித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீட் தோ்வை பற்றிய சா்ச்சைக்கு திமுக உயிா் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு திமுக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீட் தோ்வு என்பது முடிந்து போன விஷயம். இந்த உள்ளாட்சித் தோ்தல், 9 மாவட்டங்களில் திமுகவுக்கு அதிா்ச்சி அளிக்கக் கூடியதாக தான் இருக்கும். திமுக அரசு காழ்ப்புணா்ச்சியுடன் முன்னாள் அமைச்சா்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனை நடத்துகிறது. ஏதாவது சிக்கி விடாதா என்று முயற்சிக்கிறது. இதில் எந்த ஒரு ஆதாரமும் இருக்கப் போவதில்லை. பாமக வெளியேறினாலும், எங்கள் கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது.

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில், மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு தமிழக அரசுக்கு எனது பாராட்டுக்கள். பள்ளிக்கூடங்களை திறக்க தமிழக அரசு முயற்சிப்பதை வரவேற்கிறோம். ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை மூடுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com