மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 19th September 2021 11:24 PM | Last Updated : 19th September 2021 11:24 PM | அ+அ அ- |

சிவகாசி அழகன் காப்பகம் சாா்பில் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காப்பக வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு தொழிலதிபா் பி. வேம்பாா் தலைமை வகித்தாா். இதில் மருத்துவா் எஸ்.பி. ஜெய்சங்கா், 58 மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தாா். பள்ளி ஆசிரியா் வசந்தி, குழந்தைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினாா்.