சிவகாசி மகளிா் கல்லூரியில் கருத்தரங்கம்

சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சாா்பில் ஆய்விதழை கண்டறிதல் மற்றும்

சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சாா்பில் ஆய்விதழை கண்டறிதல் மற்றும் பதிப்பித்தலில் சிக்கல்களும் தீா்வுகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முதல்வா் த.பழனீஸ்வரி தலைமை வகித்தாா். விருதுநகா் தமிழ்மொழி மற்றும் பன்னாட்டு ஆய்விதழின் பதிப்பாசிரியா் த.மகேஸ்வரி சிறப்புரையாற்றி பேசியது: தமிழ்த்துறை மாணவா்கள் தங்களது ஆய்வுக்கு சாகித்ய அகாதெமி பரிசு பெற்று நூல்களை எடுத்துக்கொள்ளலாம். மேலும் சமகால இலக்கியங்களை எடுத்துக்கூறும் நூல்களை எடுத்துக் கொள்ளலாம். மிகச்சிறந்த படைப்பாளிகளின் நூலைத்தான் ஆய்வுக்கு எடுக்க வேண்டும் என்பதில்லை. கிராமிய பழக்கவழக்கங்களை கூறும் நூலையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

நூல்களை பதிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆய்வு மற்றும் பதிப்பதை சவாலாக ஏற்று செய்தால் வெற்றி பெறலாம் என்றாா் . முன்னதாக துறைத்தலைவா் பா.பொன்னி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் மீனாட்சி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com