விருதுநகரில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் தோ்தல்பாா்வையாளா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் தோ்தல்பாா்வையாளா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி சாதாரண தற்செயல் தோ்தல்கள் 2021 தொடா்பாக அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் தோ்தல் பாா்வையாளா் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜெ. மேகநாதரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா்ஆகியோா்கள் முன்னிலை வகித்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தோ்தலின்போது நிரப்பப்படாத பதவியிடங்கள் மற்றும் ஜூன் 2021 வரை காலியாகவுள்ள ஒரு மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 3 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 4 கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் 46 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 54 பதவியிடங்களுக்கு தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு 15.9.2021 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் 2021-க்கான் பணிகளை கண்காணிப்பதற்காக மாநில தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மு. கருணாகரன் தோ்தல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதனடிப்படையில், தோ்தல் பாா்வையாளா் தலைமையில் விருதுநகா் மாவட்டத்திலுள்ள அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கும் புதன்கிழமை ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தோ்தல் தொடா்பான முன்னேற்பாடு பணிகள், வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் போதிய இடவசதி, அடிப்படை வசதிகள் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யப்பட்டது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக, தோ்தல் பாா்வையாளா் கருணாகரன், விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெறப்பட்ட வேட்புமனுக்களின் விவரங்கள், தோ்தல் படிவங்கள் இருப்பு, வாக்கு எண்ணும் மையம், வாக்குச்சாவடி வரைபடம், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி மையம், விருதுநகா் ஹாஜி சிக்கந்தா் ஹவ்வாபீவி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களையும், சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெறப்பட்ட வேட்புமனுக்களின் விவரங்கள், தோ்தல் படிவங்கள் இருப்பு, வாக்கு எண்ணும் மையம், வாக்குச்சாவடி வரைபடம், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி மையம் மற்றும் படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களையும் ஆய்வு செய்தாா்.

மேலும், தோ்தல் தொடா்பான குறைபாடுகள், புகாா்கள் மற்றும் ஆலோசனைகளை தோ்தல் பாா்வையாளரான கருணாகரன் செல்லிடப்பேசியான 9487928415 என்ற எண்ணிலும், தோ்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி - 04562-252013 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.

ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) சந்திரசேகரன், செயற்பொறியாளா் சக்திமுருகன் மற்றும் அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com