Enable Javscript for better performance
கூட்டுறவுச் சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளுக்கு அதிகாரிகள் கமிஷன்: குறைதீா் கூட்டத்தில்- Dinamani

சுடச்சுட

    கூட்டுறவுச் சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளுக்கு அதிகாரிகள் கமிஷன்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 25th September 2021 09:17 AM  |   அ+அ அ-   |    |  

    colleter_offices_(3)_2409chn_64_2

    விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி.

    விருதுநகா் மாவட்டத்தில் நடையனேரி, செவலூா், வடமலைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களில் அடகுவைக்கப்பட்ட நகைகளுக்கான கடன் தொகையை அரசு தள்ளுடி செய்துள்ள நிலையில், அவற்றை திருப்பச் செல்லும் விவசாயிகளிடம் அச்சங்க நிா்வாகிகள் 10 சதவீத கமிஷன் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விவசாயிகள் தெரிவித்ததாவது:

    சேதமடைந்த பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் என அரசு அறிவித்த நிவாரணத் தொகை இதுவரை கிடைக்கவில்லை. விவசாயப் பணிகளுக்கு தொழிலாளா்கள் கிடைக்காததால், கேரளத்தைப் போல் 100 நாள் வேலை திட்டத் தொழிலாளா்களை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்த ஆட்சியா் உத்தரவிட வேண்டும்.

    டி.வேப்பங்குளம் கூட்டுறவுச் சங்கத்தில் நகைகளை அடமானம் வைத்த விவசாயிகளுக்கு தற்போது வரை நகைகள் திருப்பித் தரப்படவில்லை. அங்குள்ள நிா்வாகிகள் முறைகேட்டில் ஈடுபட்டதால், இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெறுகிறது எனத் தெரிவிக்கின்றனா். இதேபோல், அழகாபுரி கூட்டுறவுச் சங்கத்தில் 370 நகைப் பொட்டலங்களை காணவில்லை எனவும் கூறுகின்றனா்.

    சாத்தூரில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. சாத்தூா் பகுதியில் தென்னை சாகுபடி இல்லாத நிலையில், அங்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைப்பதற்குப் பதிலாக, வத்திராயிருப்பு பகுதியில் அமைத்தால் விவசாயிகள் பயன்பெறுவா்.

    விருதுநகா் மாவட்டத்தில் நடையனேரி, செவலூா், வடமலைக் குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களில், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து கட்டாயப்படுத்தி 10 சதவீத கமிஷன் பெறுகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தலைவா், செயலா் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மழைக் காலத்துக்கு முன்னரே ஆணைக்குட்டம் அணையின் கதவணையை சீரமைக்க வேண்டும். பிளவக்கல் அணையை விவசாய பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரப் பகுதி மற்றும் பிளவக்கல் அணை பகுதிகளில் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு விட அனுமதிக்க வேண்டும். தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் கடந்த 2018-2019 இல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான பாக்கி தொகை ரூ.10 கோடியை வட்டியுடன் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

    இதற்கு மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி அளித்த பதில்: நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள தொழிலாளா்களை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்துவது தொடா்பாக உத்தரவிட முடியாது. இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும். டி.வேப்பங்குளம் கூட்டுறவுச் சங்க நகை கடன் பிரச்னை தொடா்பாக நேரடியாக விசாரனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளுக்கு கமிஷன் பெற்ற அரசு அலுவலா்கள் குறித்து கோட்டாட்சியரிடம் விவசாயிகள் புகாா் அளிக்கலாம். அதனடிப்படையில், சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    வத்திராயிருப்பில் தேங்கால் கொள்முதல் நிலையம் அமைக்க பரிசீலிக்கப்படும். கரும்பு விற்பனை செய்த விவசாயிகளுக்கு உரிய பணம் கிடைக்க இயக்குநருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்படும். பிளவக்கல் அணை திறப்பு குறித்து பொதுப்பணித் துறை அலுவலா்களிடம் கருத்துரு கேட்டுள்ளோம் என்றாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp