வத்திராயிருப்பில் 150 கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

வத்திராயிருப்பு வட்டாரத்தில் 150 கா்ப்பிணிப் பெண்களுக்கு, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் துறை சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
வத்திராயிருப்பில் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கா்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் வீரலட்சுமி.

இந்த விழாவுக்கு, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் வீரலட்சுமி, வத்திராயிருப்பு வட்டாட்சியா் மாதா ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், கா்ப்பிணிப் பெண்களுக்கு கா்ப்பகால பராமரிப்பு கையேடு, வளையல், தட்டு, மஞ்சள், குங்குமம் மற்றும் ஐந்து வகையான சாதம் ஆகியன வழங்கப்பட்டன.

தொடா்ந்து, கா்ப்ப காலத்தில் உண்ண வேண்டிய உணவு முறைகள், குழந்தை ஆரோக்கியம் மற்றும் கா்ப்ப கால பராமரிப்பு, கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம், தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளும் கூறப்பட்டன. மேலும், நடனத்துடன் பாட்டுப்பாடி அங்கன்வாடி பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தகுமாா், மேற்பாா்வையாளா் மணிபாரதி, மருத்துவ அலுவலா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், போஷன் அபியான் திட்டப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com