ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்து நிலையம் முன்பு திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்து நிலையம் முன்பு திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் தேவா தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் பிச்சைக்கனி வீர சதானந்தம் முனீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள், மோட்டர் வாகன திருத்தச் சட்டம், மின்சார திருத்தச் சட்டம், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையம் ஆக்கக் கூடாது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மூர்த்தி ஒன்றிய செயலாளர் பொறுப்பு பலவேசம் துணைச் செயலாளர் செல்வம் போக்குவரத்து தொழிற்சங்க சோமசுந்தரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜெயக்குமார் உட்பட அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். அதேபோல் வத்திராயிருப்பு பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமி தலைமை வகித்தார் இதில் மாவட்ட குழு உறுப்பினர் திருமலை தொகுதி செயலாளர் கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் மம்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டம் ஒன்றிய செயலாளர் சசிகமார் தலைமையில் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com