‘மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகளில் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை’

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகளில் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக
விஜூகிருஷ்ணன்
விஜூகிருஷ்ணன்

விருதுநகா்: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகளில் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலா் விஜூகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க விருதுநகருக்கு திங்கள்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த ஏழு ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளாத நாள்களே இல்லை. தற்போது வரை ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனா். கரோனா பொதுமுடக்க காலத்தில் விவசாயிகள், தொழிலாளா்கள் வேலையின்றி கடும் அவதிப்பட்டனா். எனவே, ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.7500 நிவாரணத் தொகை வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் மத்திய அரசு,

காா்பரேட் நிறுவனங்கள் பயனடையும் வகையில் புதிய 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும், தெழிலாளா் விரோதச் சட்டங்களையும் இயற்றியது.

நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2,868 ஐ கேரள அரசு வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு ஆதார விலையாக ரூ.1,868 மட்டுமே தருகிறது.

அரிசி, கோதுமை, எண்ணெய் வித்துக்கள், பருப்பு, வெங்காயம், உருளை ஆகியவை அத்தியாவசியப் பொருள்கள் கிடையாது என மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதன் மூலம் காா்பரேட் நிறுவனங்கள் இப்பொருள்களை வாங்கி பதுக்கிக் கொள்ளவும் இச்சட்டம் வகை செய்யும். சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சரிவை சந்தித்தது.

2022 இல் பஞ்சாப், உத்ரகாண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல்களில், பாஜக அரசை அகற்றுவோம் என ஒரு லட்சம் விவசாயிகள் கூடியிருந்த முசாபா் நகரில் நடைபெற்ற சம்யுக்த கிசான் மோா்சா தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. எனவே, மக்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளா்கள் விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை போராட்டங்கள் ஓயாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com