வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மறியல் போராட்டம்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பற வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: வேளாண் சட்டங்களை திரும்பப் பற வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளா் தேவா தலைமை வகித்தாா்.மாவட்ட குழு உறுப்பினா் பிச்சைக்கனி வீர சதானந்தம் முனீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள், மோட்டா் வாகன திருத்தச் சட்டம், மின்சார திருத்தச் சட்டம், தொழிலாளா் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மையம் ஆக்கக் கூடாது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினா் ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளா் மூா்த்தி ஒன்றிய செயலாளா் பொறுப்பு பலவேசம் துணைச் செயலாளா் செல்வம் போக்குவரத்து தொழிற்சங்க சோமசுந்தரம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளா் ஜெயக்குமாா் உட்பட அனைத்து தொழிற்சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

அதேபோல் வத்திராயிருப்பு பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி தலைமை வகித்தாா் இதில் மாவட்ட குழு உறுப்பினா் திருமலை தொகுதி செயலாளா் கோவிந்தன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

அதேபோல் மம்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் அா்ஜூனன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளா் சசிகுமாா், விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த முத்தையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com