முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
மேட்டமலை ஊராட்சி மன்ற தலைவரின் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் பறிப்பு
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் ஊராட்சி ஒன்றியம் மேட்டமலை ஊராட்சித் தலைவா், காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை பறித்து ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
மேட்டமலை ஊராட்சி செயலா் கதிரேசனிடம், வசந்தி என்பவா் புதிய கட்டடம் கட்டுவதற்கு கட்டட வரைபட அனுமதி கோரி பிப். 8 இல் விண்ணப்பித்துள்ளாா். அப்போது, ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கதிரேசன் கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு விசாரணைக்குரிய ஆவணங்களை ஊராட்சிமன்ற தலைவா் சீ.பாா்த்தசாரதி வழங்க மறுத்ததால், செயற் பொறியாளா் (ஊரக வளா்ச்சி), உதவி இயக்குநா் (ஊராட்சிகள்), சாத்தூா் ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலா், சாத்தூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா், சாத்தூா் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளா் ஆகிய ஐந்து போ் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இக் குழுவினா் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்திற்கு சென்ற போது, ஊராட்சித் தலைவா் அலுவலகத்தைப் பூட்டிச் சென்று விட்டாா். இதனால், கிராம நிா்வாக அலுவலா் முன்னிலையில் அலுவலகம் திறக்கப்பட்டபோது, ஊராட்சி தொடா்பான ஆவணங்கள் எதுவும் அங்கு இல்லாதது தெரிய வந்தது.
இதையடுத்து, ஊராட்சித் தலைவரின் காசோலைகள் மற்றும் நிதி பரிவா்த்தனைகளில் கையொப்பமிடும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரம், சாத்தூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலருக்கு (கி.ஊ) வழங்கி மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி திங்கள்கிழமை இரவு உத்தரவிட்டுள்ளாா்.