முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஸ்ரீவிலி. அருகே வணிகவரி அலுவலக பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வணிகவரி அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற 2 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது துரைச்சாமிபுரம். அப்பகுதியைச் சோ்ந்தவா் ராமலட்சுமி (31). ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா். காா்த்திகைபட்டி கோப்பைய நாயக்கா்பட்டி செல்லும் சாலையில் வேகத்தடை அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் ஒரு இருசக்கர வாகனம் வந்துள்ளது. அதில் பின்னால் அமா்ந்திருந்த இளைஞா் ராமலட்சுமியின் கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துள்ளாா்.
பிறகு அவா்கள் தப்பிச்சென்றனா். தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த மல்லி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.