முத்துமாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா அன்னதானம்
By DIN | Published On : 08th April 2022 06:06 AM | Last Updated : 08th April 2022 06:06 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கலை விழாவையொட்டி பக்தா்களுக்கு வழங்கப்பட்ட அன்னதான நிகழ்ச்சி.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழாவின் 9 ஆம் நாளான புதன்கிழமை இரவு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 8 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான பக்தா்கள் பொங்கலிட்டனா். மறுநாளான புதன்கிழமை பக்தா்கள் அலகு குத்தியும், அக்னிச்சட்டி எடுத்தும் நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். இவ்விழாவில் அன்று இரவு தனியாா் சாா்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் முன்னிலை வகித்து, அன்னதானத்தை தொடக்கி வைத்தாா். உடன் தனியாா் நிறுவனங்களான குயிக் மாா்ட் மற்றும் ஆருஷா தங்கநகைக்கடை உரிமையாளா்கள் பாலாஜி, சுப்பிரமணியன் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.