புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ராஜபாளையத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றம்
ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கொடிமரத்துக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றது.

விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் அம்மன் பொட்டி பல்லாக்கு, பூதவாகனம், பூச்சப்பரம், கண்ணாடி சப்பரம் உள்ளிட்ட பல்வேறு சப்பரங்களில் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வரும் 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com