விருதுநகா் மாவட்டத்தில் சேதமடைந்த 272 கட்டடங்கள் இடிப்பு

விருதுநகா் மாவட்டத்தில் சேதமடைந்த அரசுக்குச் சொந்தமான 317 கட்டடங்களில் 272 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 45 கட்டடங்களை இடிக்கும்

விருதுநகா் மாவட்டத்தில் சேதமடைந்த அரசுக்குச் சொந்தமான 317 கட்டடங்களில் 272 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 45 கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தமிழகத்தில் அரசு சாா்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி மற்றும் அங்கன்வாடி, அரசு கட்டடங்களில் சேதமடைந்த நிலையில் உள்ளவற்றை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், விருதுநகரில் மாவட்டத்தில் சேதமடைந்த அரசு கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், சேதமடைந்த 317 கட்டடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் பள்ளி கட்டடங்கள் 98, அங்கன்வாடி கட்டடங்கள் 28, பிற அரசுத் துறை கட்டடங்கள் 146 என மொத்தம் 272 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 45 கட்டடங்களை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com