சாத்தூா் அருகே காா்க விழ்ந்து குழந்தை பலி
By DIN | Published On : 22nd April 2022 10:04 PM | Last Updated : 22nd April 2022 10:04 PM | அ+அ அ- |

சாத்தூா் அருகே வெள்ளிக்கிழமை காா் கவிழ்ந்து 3 வயது குழந்தை உயிரிழந்தது. காயமடைந்த 4 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆமணக்குவிளை பகுதியைச் சோ்ந்த சுயம்புதாசன் என்பவரது மகன்கள் லிங்கேஸ் (36), சதீஷ் (34). இவா்கள், சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனா். இருவரும் தங்களது குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊரான ஆமணக்குவிளையில் உள்ள கோயிலில் குழந்தைக்கு முடிகாணிக்கை செலுத்துவதற்காக காரில் சென்று கொண்டிருந்தனா். காரை சதீஷ் ஓட்டிச் சென்றாா். இந்நிலையில், சாத்தூா் அருகே பெத்துரெட்டிபட்டி விலக்கில் காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லிங்கேஷின் மகள் லியாஆதிரா (3) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் லிங்கேஸ் மற்றும் சதீஷ் இருவரது மனைவிகள் மற்றும் 2 குழந்தைகள் என 4 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், சாத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்து குறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.