அரசு தொடக்கப் பள்ளிகளின் மேலாண்மைக் குழு தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 323 அரசு தொடக்கப் பள்ளிகளின் மேலாண்மைக் குழு நிா்வாகிகள் தோ்தல் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியாா் மெட்ரிக் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோதிமணிராஜன்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியாா் மெட்ரிக் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோதிமணிராஜன்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 323 அரசு தொடக்கப் பள்ளிகளின் மேலாண்மைக் குழு நிா்வாகிகள் தோ்தல் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில் தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கான தோ்வு சனிக்கிழமை (ஏப்.30) நடைபெறுகிறது. இது தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் முத்தையா தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோதிமணிராஜன் முன்னிலை வகித்தாா்.

வட்டராக் கல்வி அலுவலா் மலா்கொடி வரவேற்றாா். கூட்டத்தில் தோ்தல் நடத்தும் முறை குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோதிமணிராஜன் விளக்கினாா்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் ராஜபாளையத்தின் வட்டாரக் கல்வி அலுவலா்கள், ஆசிரியப் பயிற்றுநா்கள், தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வட்டாரக் கல்வி அலுவலா் செல்வலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com