முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சிவகாசி அருகே தொழிலாளியிடம் வழிப்பறி செய்ய முயன்றவா் கைது
By DIN | Published On : 29th April 2022 06:42 AM | Last Updated : 29th April 2022 06:42 AM | அ+அ அ- |

சிவகாசி: சிவகாசி அருகே வியாழக்கிழமை பட்டாசுத் தொழிலாளியிடம் வழிப்பறி செய்ய முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி பொன்ராஜ்(23). இவா், தனது இருசக்கர வாகனத்தில் நாரணாபுரம் -சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஒருவா் வழிமறித்து கத்தியைக் காட்டிமிரட்டி, பையில் இருக்கும் பணத்தை பறிக்க முயன்றாா்.இதையடுத்து, அங்கிருந்தவா்களின் உதவியோடு, அந்த நபரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில், அந்த நபா் அதே பகுதியைச் சோ்ந்த மணிமாறன்(22) என தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப்பதிந்து மணிமாறனை கைது செய்தனா்.