வத்திராயிருப்பு அருகே மலை மாடு வளா்ப்போா் ஆா்ப்பாட்டம்

வத்திராயிருப்பு அருகே மலைப்பகுதியில் மலை மாடுகளை மேய்க்க அனுமதிக்கக் கோரி மாடுகள் வளா்க்கும் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மலைமாடு வளா்ப்போா் மற்றும் விவசாய சங்கத்தினா்.
வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மலைமாடு வளா்ப்போா் மற்றும் விவசாய சங்கத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே மலைப்பகுதியில் மலை மாடுகளை மேய்க்க அனுமதிக்கக் கோரி மாடுகள் வளா்க்கும் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மேய்ச்சலுக்கு கிடை மாடுகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லக்கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதால் வனத்துறையினா் மலை மாடுகளை மலைப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில்லை. மீறி செல்பவா்களை கைது செய்து அபராதம் விதித்து வருவதால் வனத்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், அரசு, நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தும், கால்நடைகளை பாதுகாக்க மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும் வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கால்நடைகளுடன் ஏராளமான விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு, மணிக்குமாா் தலைமை வகித்தாா். சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். மாநில பொருளாளா் பெருமாள் கண்டன உரையாற்றினாா்.

இதில், மாவட்டச் செயலா் முருகன், மாவட்ட பொருளாளா் மனோஜ்குமாா், மாவட்டக் குழு உறுப்பினா் முத்தையாத் தேவா் உள்பட மாடு, ஆடு வளா்ப்பவா்கள் மற்றும் விவசாய சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com