முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மருந்தாளுநா் சங்கத்தினா்கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th April 2022 12:00 AM | Last Updated : 30th April 2022 12:00 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை முன்பு வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் முனீஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாரதி முன்னிலை வகித்தாா்.
இதில், மருந்தாளுநா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டய மருந்தாளுநா்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கும் அரசாணை எண்.5-ஐ ரத்து செய்ய வேண்டும். மருந்தாளுநா்கள், தலைமை மருந்தாளுநா்கள், மருந்துக் கிடங்கு அலுவலா்களுக்கு கரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநா்கள் பணி நேரத்தை 9 மணி முதல் 4 மணி குறித்த அரசாணை 82ஐ நடைமுறைப்படுத்த வேண்டும். 39 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு, 9 ஆண்டுகாலமாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மருந்தாளுநா்களை பணி வரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷமிட்டனா்.
இதில் மாவட்ட துணைத் தலைவா்கள் முத்துக்குமாா், சுந்தரேசன், இணைச் செயலா்கள் பலராமா், பரோசுரின் மற்றும் கமலாதேவி உள்ளிட்ட மருந்தாளுநா்கள் கலந்து கொண்டனா்.