சிவகாசி பெத்துமரத்து ஊருணியை ரூ.1.70 கோடியில் சீரமைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல்

சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள பெத்துமரத்து ஊருணியை ரூ. 1.70 கோடியில் சீரமைக்க மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள பெத்துமரத்து ஊருணியை ரூ. 1.70 கோடியில் சீரமைக்க மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சிக் கூட்டம் மேயா் இ.சங்கீதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் உறுப்பினா் செல்வம் மற்றும் குருசாமி ஆகியோா் , பல இடங்களில் கழிவு நீா் வாய்க்கால் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது. கழிவு நீா் கால்வாயைச் சுத்தம் செய்யும் போது, அதில் உள்ள குப்பைகளை அப்படி வெளியே போட்டு விடுகின்றனா். உடனடியாக அதனை அகற்றுவதில்லை. எனவே மாநகராட்சிப் பகுதியில் சுகாதாரப்பணியை மேம்படுத்த வேண்டும் எனக்கேட்டுக் கொண்டனா்.

கட்டடம் கட்ட திட்ட அனுமதியை தாமதிக்காமல் மாநகராட்சியில் உள்ள அலுவலா்கள் வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினா் சேதுராமன் கேட்டுக் கொண்டாா்.

மாமன்றக்கூட்டத்தில் சிவகாசி பேருந்து நிலையம் அருகேயுள்ள பெத்துமரத்து ஊருணியை சீரமைக்க ரூ 1.70 கோடியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத்திட்டத்திட்ட நிதியில் பணி செய்வதற்கு மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 48 வாா்டுகளிலும், பல்வேறு வளா்ச்சிப்பணிகள் மேற்கொள்ள மாமன்றக்கூட்டம் ஒப்புதல் அளித்தது.

இக்கூட்டத்தில் துணை மேயா் கா. விக்னேஷ் பிரியா, ஆணையாளா் ப.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com