அருப்புக்கோட்டையில் சாயக்கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை: காணொலியில் முதல்வா் திறந்து வைப்பு

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் ரூ.64.93 லட்சம் மதிப்பீட்டில் சாயக்கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலையை வெள்ளிக்கிழமை காணொலிக்காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா
அருப்புக்கோட்டையில் சாயக்கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை: காணொலியில்  முதல்வா் திறந்து வைப்பு

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் ரூ.64.93 லட்சம் மதிப்பீட்டில் சாயக்கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலையை வெள்ளிக்கிழமை காணொலிக்காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் காமராசா் நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.64.93 லட்சம் மதிப்பீட்டில் சாயக்கழிவு நீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டது. இந்த ஆலையை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் பழனிச்சாமி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். இதில் திமுக நகரச் செயலாளா் ஏ.கே.மணி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சுப்பாராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் காமராசா் நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்க நிா்வாக இயக்குநா் கணேசன், கைத்தறி ஆய்வாளா்கள் விஸ்வேஸ்வரன், சுஜிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com