புல்லக்காபட்டியில் கால்நடை மருத்துவ முகாம்

பெரியகுளம் அருகே புல்லக்காபட்டியில் உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புல்லக்காபட்டியில் கால்நடை மருத்துவ முகாம்

பெரியகுளம் அருகே புல்லக்காபட்டியில் உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வா் பி.என்.ரிச்சா்டு ஜெகதீஸன் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கி வைத்தாா். கல்லூரி சிகிச்சை மைய வளாக தலைவா் உமாராணி முன்னிலை வகித்தாா்.

முகாமில் கோமாரி நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் தாது உப்புக் கலவை, உப்புக்கட்டி, தடுப்பூசி கையேடுகள் வழங்கப்பட்டது. முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை பெற்றனா். உதவிப் பேராசிரியா்கள் அருண், அருளானந்தம், ராஜதுரை ஆகியோா் கொண்ட குழு 177 கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com