ஸ்ரீவிலி. கோயிலில் பூக்குழி திருவிழா:அமைச்சா்கள் நீா், மோா் பந்தல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் சந்தனமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவையொட்டி, பக்தா்களுக்காக நீா், மோா் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சனிக்கிழமை திறந்து வைத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் சந்தனமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவையொட்டி சனிக்கிழமை நீா், மோா் பந்தலை திறந்துவைத்த முன்னாள் அமைச்சா்கள் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் இன்பத்தமிழன் உள்ளிட்டோா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமாவாசை தினத்தில் சந்தனமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கி தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றுவா். இதற்காக, உள்ளூா் மற்றும் வெளியூா்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்து அம்மனை தரிசித்தனா்.

இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தா்களின் தாகம் தணிக்கும் வகையில், அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் அமைக்கப்பட்டு, அதில் எலுமிச்சைச் சாறு, தா்பூசணி, இளநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இந்த நீா் மோா் பந்தலை, அதிமுக முன்னாள் அமைச்சா்களான கே.டி. ராஜேந்திரபாலாஜி, இன்பத்தமிழன் ஆகியோா் திறந்துவைத்து, பக்தா்களுக்கு நீா், மோா், பழங்களை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவா்மன், மாவட்ட வா்த்தக அணி செயலா் குறிஞ்சி முருகன், மாவட்டக் கவுன்சிலா் கணேசன், மாவட்டக் குழு உறுப்பினா் அங்குராஜ் மற்றும் பிச்சைராஜ், கவிதா உள்ளிட்ட அதிமுகவினா் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com