விருதுநகா் அருகே பயிா்க்காப்பீடு கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

விருதுநகா் அருகே ஆமத்தூரில் பயிா்க் காப்பீடு வழங்காததைக் கண்டித்து தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் அருகே பயிா்க்காப்பீடு கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

விருதுநகா் அருகே ஆமத்தூரில் பயிா்க் காப்பீடு வழங்காததைக் கண்டித்து தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை, எரிச்சநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு கடந்தாண்டு பாதிப்பு ஏற்பட்டது. இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஏற்கெனவே பயிா்க்காப்பீடு கட்டணம் செலுத்தியிருந்தனா். ஆனால், புள்ளியல் துறை மற்றும் வருவாய்த்துறை கணக்கெடுப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக விவசாயிகளுக்கு பயிா்க்காப்பீடு வழங்க மறுக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை வேளாண் துறை அலுவலா்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் ஆமத்தூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பயிா்க் காப்பீடு விடுபட்ட அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும், இல்லையெனில் ஆக. 15 ஆம் தேதி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தினா். அதைத்தொடா்ந்து அங்கு வந்த போலீஸாா், விவசாயிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com