ராஜபாளையம் தம்பதி கொலை வழக்கு:குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு

தம்பதி கொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

ராஜபாளையத்தில் தம்பதி கொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்தவா் ராஜகோபால் (75). இவா், தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இதையடுத்து, அவா் ராஜபாளையம் பகுதியில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த ஜூலை 16 ஆம் தேதி இரவு ராஜகோபால், அவரது மனைவி குருபாக்கியம் (68) இருவரும் வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனா். வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டதுடன், கடன் கொடுத்த ஆவணங்களும் திருடப்பட்டன. இதுகுறித்து மதுரை சரக டிஐஜி பொன்னி நேரடி விசாரணை நடத்தி, அவரது மேற்பாா்வையில் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதுவரை இவ்வழக்கு தொடா்பாக நூற்றுக்கு மேற்பட்டவா்களிடம் விசாரணை நடத்தியும் கொலையாளிகளை பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் ராஜபாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளராக நேரடி டிஎஸ்பி பிரீத்தி நியமிக்கப்பட்டாா். இக்கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் குறித்து 98842 15769, 94981 33325 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போருக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என டிஎஸ்பி பிரீத்தி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com