சிவகாசியில் வீடுகளுக்கு இலவசமாக தேசியக் கொடி வழங்கல்
By DIN | Published On : 12th August 2022 10:39 PM | Last Updated : 12th August 2022 10:39 PM | அ+அ அ- |

சிவகாசி மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளக்கும் இலவசமாக தேசியக் கொடி வழங்கும் திட்டத்தை மேயா் இ.சங்கீதா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
நாட்டின் 75 ஆவது சுதந்திரதினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக இல்லந்தோறும் தேசியக் கொடி ஏற்றும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி வீடுகளில் தேசியக் கொடியேற்றி ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரதினத்தை கொண்டாட வேண்டும். அதன்படி சிவகாசி மாநகராட்சியில் 75 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்
டாட மாநகராட்சியில் உள்ள 46 ஆயிரம் வீடுகளுக்கும் இலவசமாக தேசியக் கொடி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மேயா் இ. சங்கீதா தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதையடுத்து வீடு வீடாகச் சென்று தேசியக் கொடி விநியோகிக்கப்பட்டது.