ஸ்ரீவிலி.யில் தேசிய மக்கள் நீதிமன்றம் :1,601 வழக்குகளில் ரூ.8.98 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,601 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு தீா்வுத்தொகையாக ரூ.8.98 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.

விருதுநகா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் நீதிபதி கிறிஸ்டோபா் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பிலும், விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூா், ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 4,110 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 1,601 வழக்குகளில் தீா்வு காணப்பட்டு, ரூ.8.98 கோடி தீா்வுத் தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டது.

இதில் வழக்குரைஞா்கள், தன்னாா்வ சட்டப்பணியாளா்கள், அரசுத்துறை அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஊழியா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com