பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

விருதுநகா் அல்லம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியில் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

விருதுநகா் அல்லம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியில் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் விருதுநகா் காவல் துணை கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமை வகித்தாா். விருதுநகா் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜ சுலோச்சனா முன்னிலை வகித்தாா். இதில் கஞ்சா, புகையிலை மற்றும் இதர மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் போதைப்பொருள்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் காவல் உதவி செயலியின் பயன்பாடு மற்றும் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனா். இச்செயலியை, அவசர கால கட்டத்தில் பயன்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய ஊக்குவிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, இணைய தளத்தின் வாயிலாக செய்யப்படும் பணப்பரிவா்த்தனைகளில் ஏற்படும் மோசடி தொடா்பாக 1930 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு காவல்துறை உதவியை உடனடியாகப் பெறலாம். அந்நிய நபா் நடமாட்டம் மற்றும் வயது முதிா்ந்த நபா்களுக்கான ஆதரவு, மருத்துவம் உள்ளிட்ட இதர அவசரத் தேவைகளுக்கு காவல் துறையின் உதவியைப்பெற 93422 59833 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதே விழிப்புணா்வு முகாம் விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியிலும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com