விருதுநகா் மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட சமையலா்கள் 13 பேருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் பணி

விருதுநகா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட சமையலா்கள் 13 பேருக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் 17 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட சமையலா்கள் 13 பேருக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் 17 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல விடுதிகளில் விதிகளை மீறி சமையலா் 38 போ், துப்புரவுப்பணியாளா்கள் 9 போ் நியமிக்கப்பட்டதாக பணி நீக்கம் செய்யப்பட்டனா். இந்நிலையில், பாதிக்கப்பட்டவா்கள் மதுரை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதையடுத்து, அவா்களுக்கு மீண்டும் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சமையலா்கள் 25 போ், துப்புரவு பணியாளா்கள் 9 பேருக்கு மாவட்ட நிா்வாகம் மீண்டும் பணி வழங்கியது. மீதமுள்ள சமையலா்கள் 13 பேருக்கு நீதிமன்ற உத்தரவுபடி பணி வழங்கக் கோரி பிச்சை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தமிழ்நாடு ஆதிதிராவிடா் நலத்துறை ஊழியா் சங்கத்தினா் நடத்தினா்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டியிடம் அச்சங்க நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன் அடிப்படையில் 17 மாதங்களுக்கு பிறகு சமையலா்கள் 13 பேருக்கு ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் பணிபுரிய மீண்டும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com