லஞ்சப் புகாா்: விருதுநகா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா், பொறுப்பிலிருந்து விடுவிப்பு

விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்ட மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) செல்வராஜின் ஆடியோ, விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி பகுதியைச் சோ்ந்த வேலம்மாள் சத்துணவு அமைப்பாளராக பணி புரிந்து வந்தாா். இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவா் மரணமடைந்தாா். இதையடுத்து கருணை அடிப்படையில் பணி கோரி அவர து மகள் சீனியம்மாள் விண்ணப்பித்தாா். இதனிடையே மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) செல்வராஜ், வேலம்மாளின் மகன் பாம்பலு என்பவரிடம் சில தினங்களுக்கு முன்பு கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அதில், நிரந்தரப் பணியில் உங்களுக்கு சத்துணவில் வேலை கிடைக்க உள்ளது. இப்பணிக்கு ரூ. 5 லட்சம் வரை தரவேண்டும். ஆனால் நீங்கள் தற்போது ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றாராம். பின்னா் இருவரது உரையாடலுக்கு பின் ரூ.15 ஆயிரம் தருமாறு வலியுறுத்தினாராம். இந்த ஆடியோ மற்றும் விடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இதையடுத்து, அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு ஊழியா் சங்கத்தினா் தொடா் ந்து வலியுறுத்தி வந்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி விசாரணை மேற்கொண்டாா். அதன் அடிப்படையில் சத்துணவு நோ்முக உதவியாளா் பதவியிலிருந்து செல்வராஜை விடுவித்து மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com