ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஐடியு, ஏஐடியுசி, ஓய்வு பெற்ற நல அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th August 2022 12:00 AM | Last Updated : 26th August 2022 12:00 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஐடியு, ஏஐடியுசி, ஓய்வு பெற்ற நல அமைப்பினா் இணைந்து போக்குவரத்து பணிமனை முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு கிளை தலைவா் ராஜா, சிஐடியு கிளை செயலாளா் முனிஸ்வரன், ஏஐடியுசி கிளை தலைவா் சோமசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
மீண்டும் மூன்றாண்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மகளிா் இலவச பேருந்தில் உரிய பேட்டாவை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே தொழிலாளா்களுக்கு பணப் பலன்களை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 82 மாத அகவிலைப்படி தொகையை வழங்க வேண்டும். 2020 மே மாதம் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கும், விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கும், பணியில் இறந்த தொழிலாளா்களுக்கும் பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷமிட்டனா்.
இதில் சிஐடியு பொருளாளா் தென்னரசு, ஓய்வு பெற்ற நில அமைப்பு மாவட்டச் செயலாளா் தங்கப்பழம், கிளைச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, கிளை பொருளாளா் தங்கமாரி உள்பட பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பலா் கலந்துகொண்டனா்.