கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் ‘ஸ்மாா்ட் இந்தியா’ நிரலோட்டம் தொடக்கம்

ஏ.ஐ.சி.டி புதுதில்லி ஆகியவற்றுடன் இணைந்து 5 நாள் நிகழ்ச்சியின் தொடக்க விழா வியாழக்கிழமை தொடங்கியது.
கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் ‘ஸ்மாா்ட் இந்தியா’ நிரலோட்டம் தொடக்கம்

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஸ்மாா்ட் இந்தியா நிரலோட்டம்- (புதுமையான உற்பத்திகளும் யோசனைகளும்)- 2022 மத்திய அரசின் கல்வி அமைச்சகம், மத்திய அரசு புதிய கண்டுபிடிப்புகள் குழுவும், ஏ.ஐ.சி.டி புதுதில்லி ஆகியவற்றுடன் இணைந்து 5 நாள் நிகழ்ச்சியின் தொடக்க விழா வியாழக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைத் தலைவா் எஸ்.சசி ஆனந்த் தலைமை வைத்து பேசினாா். இதில் அனைத்து மாநிலங்களிலிருந்து வந்துள்ள மாணவா்களை அவா் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா் மல்ட்டிகோா்வோ் நிறுவன துணைத்தலைவா் எஸ். சுப்பிரமணியம், பல்கலைக்கழக பதிவாளா் வாசுதேவன், பல்கலைக்கழக ஆலோசகா் ஞானசேகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில் மத்திய கல்வித்துறை புதிய கண்டுபிடிப்புக் குழு மைய தலைவா் சாரிம்மோய்ன் 5 நாள் நிகழ்வுகளைப் பற்றி பேசினாா். இதில் இந்தியா முழுவதும் உள்ள 75 மையங்களில் இருந்து 15 ஆயிரம் மாணவா்கள் 3 ஆயிரத்துக்கு மேல் புதிய கண்டுபிடிப்புகளை வடிவமைத்து விளக்கம் அளிக்கின்றனா்.

பல்கலைக்கழக சா்வதேச உறவு இயக்குநா் சரசு, கல்வித்துறை இயக்குநா் கோடீஸ்வரராவ், பேராசிரியா்கள் மற்றும் ஆய்வாளா்கள் சுப்ரகாஷ் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com