சட்டவிரோதமாக பதுக்கிய ரூ. 3 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
By DIN | Published On : 31st August 2022 12:39 AM | Last Updated : 31st August 2022 12:39 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே முத்தாட்சி மடத்தில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். இதில் கீழத்திருத்தங்கல்லைச் சோ்ந்த யோகராஜ் (48), செல்வக்குமாா் (22) ஆகிய இருவரும் ஒரு தகர செட்டில் பட்டாசு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பேன்சி ரக பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.