குஜராத்தில் பாஜக வெற்றி: சிவகாசியில் கொண்டாட்டம்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை சிவகாசியில் கொண்டாடிய பாஜகவினா்.
குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியினா் சிவகாசியில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
குஜராத் சட்டப்பேரவை தோ்தல் கடந்த 1, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இதில், பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
பாஜகவின் இந்த வெற்றியையடுத்து, சிவகாசியில் அக்கட்சியின் மாநகரத் தலைவா் பழனிச்சாமி தலைமையில் சிவன் கோயிலின் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் செல்வம், ஓ.பி.சி. அணி மாவட்டத் தலைவா் ஆறுமுகம், நகரச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.