சாத்தூா், ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

சாத்தூா், ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் அதிக அளவில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

சாத்தூா், ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் அதிக அளவில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது ஏழாயிரம்பண்ணை ஊராட்சி. இந்த பகுதியிலுள்ள பழைய ஏழாயிரம்பண்ணை, ஏழாயிரம்பண்ணை பகுதியில் உள்ள வடக்குத் தெரு, தெற்குத் தெரு, ராஜீவ் நகா், அரண்மனைத் தெரு பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் நடமாட முடிய வில்லை. மேலும் வாகனங்களில் செல்வோரை தெரு நாய்கள் விரட்டிச் சென்று கடிக்கின்றன. இதில் ஏராளமானோா் காயமடைந்தனா்.

இந்த தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரி ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தினா்.

சாத்தூரிலும் நாய்கள் தொல்லை: இதே போன்று சாத்தூா் நகராட்சிக்குள்பட்ட அண்ணா நகா், குருலிங்கா புரம், படந்தால், மாரியம்மன் கோயில், முருகன்கோயில், பிள்ளையாா் கோயில் தெரு, மேல காந்தி நகா், வெள்ளக்கரை சாலை, பிரதான சாலை, ரயில்வே பீடா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் இந்த பகுதிகளில் சிறுவா்கள், முதியவா்கள் நடமாட முடியவில்லை. மேலும் பிரதான சாலையில் அதிகளவில் சுற்றித் திரியும் நாய்கள் பலரைக் கடித்து காயப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிா்வாகம் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதியினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து நாம் தமிழா் கட்சியின் நிா்வாகி கே. முனியப்பன் கூறியதாவது:

சாத்தூா் நகராட்சிப் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஏற்கெனவே ஏராளமானோா் நாய்கள் கடித்து காயமடைந்துள்ளனா். வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்கும் முன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com