வளா்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவா் ஆய்வு மேற்கொண்டாா்

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவா் ஆய்வு மேற்கொண்டாா். விருதுநகா் மாவட்டம்,சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளா்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவா் மேகநாதரெட்டி வெள்ளிகிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்,முத்தாண்டியாபுரம் கிராமத்தில்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ்,தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளையும்,சமூக பங்களிப்பு நிதியின் மூலம் உதயம் திட்டத்தின் கீழ் ரூ.35,000 மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு கழிப்பறை கட்டும் பணியையும்,கங்கரக்கோட்டை ஊராட்சி இ.மேட்டுப்பட்டி கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய சுகாதார வளாகப் பணிகளையும், கோவில்செல்லையாபுரம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.4.56 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட சுற்றுச்சுவா் பணிகளையும்,ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்,ரூ.7.50 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், ரூ.12,500 மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சமுதாய உறிஞ்சு குழாய் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்து,பணிகளை தரமாகவும்,விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களை அறிவுறுத்தினாா்.இந்த ஆய்வின்போது வருவாய் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com