விருதுநகா் புத்தகக் கண்காட்சியில் பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

விருதுநகா் புத்தகக் கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வியாழக்கிழமை நடை பெற்றது.
விருதுநகா் புத்தகக் கண்காட்சியில் பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

விருதுநகா் புத்தகக் கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வியாழக்கிழமை நடை பெற்றது.

விருதுநகரில் காமராஜரின் 120 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, மக்கள் வாசிப்பு இயக்கம், ஜேசிஐ, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச, தமிழ்நாடு புத்தக விற்பனையாளா் சங்கம், மிா்த்திகா பதிப்பகம் ஆகியன இணைந்து, வாடியான் மாதா திருமண மண்டபத்தில் ஜூன் 14 முதல் 24ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகின்றன.

இதில் அமைக்கப்பட்டுள்ள 30 அரங்குகளில், 50 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சம் தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் அனைத்து முன்னணி பதிப்பக மற்றும் எழுத்தாளா்களின் நூல்களும் , சாகித்ய அகாதெமி விருதுபெற்ற புத்தகங்களும் மற்றும் கதை, கவிதை, வரலாறு ஆன்மிகம், தோ்வுக்குரிய நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள் என ஆயிரக்கணக்கான நூல்கள் விற்பனைக்கு உள்ளன. அனைத்து நூல்களும் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்கப்பட்டு வருகிறது.

இக்கண்காட்சியில் தினமும் மாலை 5 மணிக்கு இலக்கிய உரை, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதனடிப் படையில், புதன்கிழமை மாலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில், 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் ஏராளமான மாணவா்கள் கலந்துகொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

இதன் நடுவா்களாக, தேனி வசந்தன், தாய் பதிப்பகம் கணேசன் ஆகியோா் செயல்பட்டனா். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என, மக்கள் வாசிப்பு இயக்கத்தின் நிறுவனா் வீரபாலன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com